இவரை கண்டால், உடனே பொலிஸாருக்கு தகவல் வழங்கவும்

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 63/17 மெகஸின் வீதியில் வசிக்கும் - கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இளைஞர் ஒருவர், வீட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் இவர் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மே 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச்செல்வதற்கு சுகாதார அதிகாரிகள் நேற்று அவரின் வீட்டுக்குச்சென்றுள்ளனர். எனினும், அவர் வீட்டில் இருக்கவில்லை. தப்பியோடியுள்ளார். சங்கீத் தனுஷ்க என்ற 28 வயதுடைய குறித்த இளைஞனை கண்டால் உடன் பொலிஸாருக்கு தகவல்...

விரிவுரையாளரின் சடலம் மின் தகனம் செய்யப்பட்டது!

கொரோனா தொற்றுக்கு உள்ளான யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் மின் தகனம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த , யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் , விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதியானது. அதனை அடுத்து யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். விரிவுரையாளரின் சடலம் கொரோனா...

எழுமாறாக மேற்கொண்ட சோதனையில் மாவடிப்பள்ளியில் மூவர் தொற்றாளராக அடையாளம்

இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மாவடிப்பள்ளியில் மேற்கொண்ட 57 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் மூன்று பேர் கொவிட் 19 தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது. மேலும் 08 பீ.சி.ஆர். மாதிரிகளும் இன்று எடுக்கப்பட்டுள்ளன என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை...

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இளம் பெண்ணை கட்டி வைத்து, மிளக்காய் தூள் தூவி சித்திரவதை

சகோதரர்களான அக்காவையும்‌ தம்பியையும்‌ கட்டி வைத்து கடுமையாக சித்திரவதை செய்தனர்‌ என்று குற்றம்சாட்டி கோப்பாய்‌ பொலிஸாருக்கு எதிராக பாதிக்‌கப்பட்டவர்கள்‌, மனித உரிமைகள்‌ ஆணைக்குழுவின்‌ யாழ்ப்பாணப்‌ பிராந்திய அலுவலகத்தில்‌ முறைப்பாடு. பதிவு செய்துள்ளனர்‌. அவர்களின் முறைப்பாட்டின்படி, திருட்டுச்‌ சம்பவம்‌ ஒன்றில்‌ சந்தேக நபரான புத்தூர்‌ பகுதியைச்‌ சேர்ந்த நபர்‌ ஒருவர்‌ இருபாலை பகுதியில்‌ உள்ள அவரது சகோதரியின்‌ வீட்டில்‌ தலைமறைவாகி உள்ளார்‌ என்று கூறி, கோப்பாய்‌ பொலிஸார்‌ கடந்த 21ஆம்‌ திகதி குறித்த வீட்டில்‌ சோதனை மேற்கொண்‌டுள்ளனர்‌. அங்கு அந்த நபர்‌ இல்லை என்றதும்‌ திரும்பிச்‌ சென்றுவிட்டு அன்றைய...

கொவிட் தொற்றினால் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார். இவ் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் விரிவுரையாளராக பல்கலைக்கழக வாழ்வில் மறக்க முடியாத பல்லாயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டிய மிக சிறந்த அன்புக்குரிய விரிவுரையாளராக பணியாற்றியவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம் "நிறை குடம் தழும்பாது" என்ற பழமொழிக்கு நான் கண்ட முதல் உதாரணம் திருமதி. ஆனந்தகுமாரசுவாமி அம்மா அவர்கள் தான். நிமிர்ந்த நடையும் கணீரென்ற குரலும் சிரித்த முகமும் அவரை மென்மேலும் அழகுறச் செய்பவை. வேம்படி அன்னையின் அன்பான விசுவாசி. ஆம்...

சம்மாந்துறை கல்லரிச்சல் ஆற்றிலிருந்து கைத்துப்பாக்கி கண்டெடுப்பு !

சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை கல்லரிச்சல் பைந்தாற்றில் அமெரிக்க தயாரிப்பு இயங்கு நிலை கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது நேற்று (27.05.2021) அதிகாலை லொறியில் மணல் ஏற்றுவதற்காக சென்றவர்களினால் கண்டெடுக்கப்பட்டு இன்று (28.05.2021) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தண்ணீர் பானையில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. (28) பிற்பகல் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. கலேவெல திக்கல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இன்று மாலை முதல் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது. நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனால் அரசடியில் வசியும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியை தனிமைப்படுத்துவதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் இன்று காலை கோரிக்கை...

வீட்டில் இறந்தவரிற்கு கொரோனா

கிண்ணியா பைசல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒருவர் தீடீர் என வீட்டில் மரணம் அடைந்துள்ளார். இதனை அறிந்து உடனடியாக அந்த இடத்திற்கு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி DR.எம்.எச்.எம்.றிஸ்வி மற்றும் சுகாதார குழுவினர் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு உயர் குருதி அழுத்தம் இருந்து வந்தமை அவரது மருத்துவ சான்றுகளிலிருந்து தெளிவாவதாக DR. எம். எச். எம். றிஸ்வி உறுதிப்படுத்தினார். தற்போது ஜனாஸா கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு்ள்ளது.

கிளைமோர், துப்பாக்கி ரவைகளுடன் முன்னாள் போராளி கைது

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னாள் போராளி ஒருவர் கிளைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் இராணுவச் சிப்பாய்க்கு தாக்கி தலைமறைவாகி இருந்து பின்னர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியே அவரது மீன்வாடியில் வைத்து இன்று மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து கிளைமோர் வெடிகுண்டு, சார்ஜர், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே...