காரைதீவு பிரதேசத்தில் எழுமாறாக அண்டிஜென்: 14 பேர் அடையாளம்

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் திங்கட்கிழமை (31) எழுமாறாக மேற்கொண்ட 102 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 14 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார...

முன்னாள் போராளி ஜெயகாந்தன் திடீர் மறைவு

முன்னாள் போராளி ஜெயகாந்தன் திடீர் மறைவு

பூநகரி பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயகாந்தன் இன்றைய தினம் அகால மரணமடைந்துள்ளார். போரின் போது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் சக்கரநாற்காலியுடன் இதுவரை அவர் வாழ்ந்து வந்தார். தமிழீழ யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி தனது சொந்த முயற்சியினால் கற்று அரசு தொழிலும் இணைந்து கொண்டார். மனிதநேய சிந்தனையாளராக அறியப்படும் இவர் பல்வேறான இடர் காலப்பகுதியிலும் பொதுமக்களுக்கு தன்னாலான உதவிகளை புரிந்ததோடு தனது சிறப்பான சேவையையும் இதுவரையில் ஆற்றி வந்துள்ளார். மேலும், இவரது மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்

பொலிஸாரின் சைகையை மீறி பயணித்த வாகனத்துடன் இருவர் கைது

நாடு பூராகவும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் பொலிசாரின் சைகையை மீறி பயணித்த சிறிய பட்டா ரக வாகன சாரதியையும், அவரோடு பயணித்த அவரது நண்பரையும் நேற்று (31) மாலை நிந்தவூரில் வைத்து பொலிசார் கைது செய்தனர். இவ்விடயம் பற்றி தெரிய வருவதாவது ; கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் குறித்த சிறிய பட்டா ரக லொரி வருவதை அவதானித்த போக்குவரத்துப் பொலிசார், அதனை நிறுத்துமாறு சைகை செய்தனர். இருந்தபோதும், பொலிசாரின் சைகையை மீறி வாகனத்தை நிறுத்தாமல், அதிக வேகத்தில் வாகனம் அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில்...

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் தடம்புரண்டு விபத்து; 7 பேர் படுகாயம்

கிளிநொச்சி, கொக்காவில் ஏ9 வீதியில் வேக்கட்டுப்பாட்டை இழந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (31.05) மாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, ஏ9, வீதி வழியாக கிளிநொச்சி நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர், வாகனம் கொக்காவில் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் வாகன சாரதி உட்பட படுகாயமடைந்த ஏழு பேரும் மணலுக்குள் புதையுண்டு இருந்த நிலையில்...

வேலைநிறுத்த போராட்டத்தில் களமிறங்க தயாராகும் அகில இலங்கை தாதியர் சங்கம்

நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக தாதியர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது. மேற்படி வேலைநிறுத்தமானது நாளை (31) காலை காலை 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பி. மெதிவத்த தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அனைத்து இலங்கை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த குருகே தெரிவிக்கையில், தாதியர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நாளைய தினத்துக்கு முன்னதாக தீர்க்கப்படாவிட்டால்,...

திருடப்பட்டிருந்த வாகனங்கள் மீட்பு

இரத்தினபுரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய 25 முச்சக்கரவண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அண்மையில் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது , கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்ட 13 முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை இவர்களிடம் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய மேலும்...

எங்கள் தெய்வீக காதலை பிரிக்காதீர்கள்; யாழில் 20 வயது இளைஞனுடன் ஓடிப்போன 38 வயது காதல் ராணி

38 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும், 20 வயதான இளைஞனிற்கும் ஏற்பட்ட கண்றாவி காதலால், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பெரும் களேபரம் ஏற்பட்டது. கலாப காதலர்கள் இருவரும், லொக் டவுனையும் பொருட்படுத்தாமல், செல்வச்சந்நிதி ஆலய சூழலில் லொள்ளுவிட வந்த சமயத்தில், உறவினர்களால் சுற்றிவளைக்கப்பட்டு, களேபரம் ஏற்பட்டது. இறுதியில் வல்வெட்டித்துறை பொலிசாரே தலையிடும் அளவிற்கு, அந்த ஜோடி காதலில் உறுதியாக இருந்துள்ளது. காதல் ராணி வடமராட்சி துன்னாலையை சேர்ந்தவர். இரண்டு பிள்ளைகளின் தாய். அவரது கணவர் மேசன் தொழில் செய்து வருகிறார். மேசன் வேலையாக கொற்றாவத்தை, சமரபாகுவிற்கு...

ஒரு ஏழை மாணவியின் உள்ளத்து குமுறல்

யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல, ஒரு ஏழை மாணவியின் உள்ளத்து குமுறல் .. சேர் , உங்கள் zoom அழைப்பு கிடைத்தது ஆனால் passcode தான் கிடைக்கவில்லை. பணம் கட்டினால் தான் அது கிடைக்குமாமே, பகலுணவுக்கு வழியில்லை பாதை வியாபாரம் செய்யும் அப்பா பாதுகாவலனுக்கும் பயந்து பயந்து மறைந்து மறைந்து செய்யும் வியாபாரம் ஒரு வேளை உணவுக்கே போதாதாம் சேர். ஆயிரம் ரூபா தேட பாதையில் பல பாயிரம் ஓத வேண்டுமாம். ஒரு நாளில் அதை உங்களுக்கு வைப்பிலிட ஒரு கிழமை எமது அடுப்புக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமே சேர். நான்கு சகோதரர்கள் நாம் டேட்டா போடுவதற்கே எமது அப்பாவின் பல பாட்டாக்கள் தேய வேண்டுமே சேர். சம்பலுடன் தான் நாம் சாப்பிடுகிறோம் என்பதை சம்பளம் வீட்டுக்கு வரும் உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் தானிருக்கும் சேர். அறிவு தர்மம்...

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரிற்கு கொரோனா

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரலவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்றில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது கந்தளாய் பிரதேசத்தில் இருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை அவருடைய பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மது ஒழிப்புக்கு எதிராக போராடிய இளைஞன்மீது வாள்வெட்டு

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட, புரட்டொப், மேமலை தோட்டத்தில் இளைஞர் ஒருவர்மீது இனந்தெரியாதோர் இன்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேமலை தோட்டத்தில் வாழும் மக்கள், கசிப்பு உட்பட சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் போதைப்பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும், போதையற்ற மலையகம் உருவாக வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இப்போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய தேவதாஸ் திவ்யானந்தன்மீதே வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து அத்தோட்டத்தில் பெரும் பதற்றம் நிலவியது. இதற்கு கண்டனம் தெரிவித்து தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கானவர் புஸல்லாவை,...