தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் கைவசம்
தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் நடிகை சமந்தாவிற்கு விவாகரத்து நடந்தது. விவாகரத்து அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரும் நடிகை சமந்தா, படங்களில் நடிப்பதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா யாரோ ஒரு ஆண் நண்பருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருப்பது, சமந்தாவின் காதலரா என்று கூட பலரும் கேட்டு வருகிறார்கள்.