Home LIFESTYLE NEWS பாண்டியன் சுவையூற்று பற்றுசீட்டு உண்மையா!?

பாண்டியன் சுவையூற்று பற்றுசீட்டு உண்மையா!?

ஒரு பற்றுசீட்டு இங்கு பேஸ்புக்கில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. வன்னியில் கிளிநொச்சி நகரில் இயங்கி வந்த பாண்டியன் சுவையூற்று உணவகத்தில் 2003 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட கணனி பதிப்பில் உள்ள ஒரு பற்றுசீட்டே அது.

ஒரு வகையில் பெருமையாக உள்ளது. 2003 இல் இந்த பற்றுசீட்டு சாத்தியமா என்று ஒரு தரப்பு வியக்கிறது. இல்லை சாத்தியமே இல்லை என்று அடித்து கூறி மறுக்கிறது ஒரு தரப்பு. ஆனால் அந்த காலத்தில் வன்னியில் புலிகளின் இராஜ்ஜியத்தில் வாழ்ந்தவர்கள் மட்டும் “இதென்ன ஆச்சரியம் இதை விட பார்த்தவர்கள் நாம்” பெருமிதம் கொள்கின்றனர்.

ஆம்! அது உண்மையான ஒரு பற்றுசீட்டு , வன்னியில் மிகவும் சுவை மிக்க உணவு வகைகளை சுகாதார முறையில் மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்து வந்த பாண்டியன் சுவையூற்றில் இந்த கணனி பாதிப்பு பற்றுசீட்கள் பாவனையில் இருந்தது.

தனி தமிழ் எழுத்துரு!

புலிகள் 1995 இல் இருந்தே கணனி பிரிவு உருவாக்கத்தில் காட்டிய அதி முனைப்பு காரணமாக அசுர வேகத்தில் அவர்களின் கணனி பிரிவு வளர்ச்சி அடைந்திருந்தது. சில உபகரணங்களின் டிஸ்பிளே கூட தமிழில் இருக்குமாறு unicode மாற்றம் செய்யும் நிலையில் இருந்தவர்களுக்கு இந்த POS சிஸ்டேத்தில் மாற்றம் கொண்டு வருதல் பெரிய விடயமா என்ன?

அதில் குறிப்பிட்ட SLT தொலைபேசி இலக்கம் உண்மையா?

சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் , SLT தனது சேவைகளை ஆரம்பிக்க அனுமதி கொடுக்கப்பட்ட பின்னர் கிளிநொச்சியில் SLT இணைப்புக்கள் இருந்தது. பின்னர் 2006 உடன் பொது மக்கள் மற்றும் INGO க்கான இணைப்புக்கள் புலிகளால் நிறுத்தப்பட்டது.

அது மட்டுமன்றி , அனலாக் முறையில் இயங்கும் மொபிட்டல் இணைப்பு கூட இருந்தது. (மல்லாவியில் எமது வீட்டில் அப்பா வடிவமைத்த ஒரு டவரில் இருந்து கூட வேலை செய்தது.)

இலங்கையை வைத்து கொண்டு இதெல்லாம் 2003 இல் சாத்தியமா என்று கேள்வி கேட்போர் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அங்கிருந்த ஏனைய அதி தொழிநுட்பங்களுடன் ஒப்பிட்டால் இந்த கணனி பற்றுசீட்டு ஒரு விடயமே இல்லை.

* 10 வேறுபட்ட UHF அலைவரிசைகளில் இயங்க கூடிய யப்பானிய இராணுவ தொடர்பாடல் சாதனங்கள் அங்கே ஒரு கட்டுப்பாட்டு நிலையம் மூலம் இயக்கப்பட்டது.

* Intelsat செய்மதிக்கு தரவு அனுப்பும் up link 20 GHz இயங்கியது.

* ஒரு டோரா படகின் அசைவை கூட துல்லியமாக காட்டும் கடல் பாதுகாப்பு FM-CW வகை ராடர்கள் பாவனையில் இருந்தது.

இப்படி இன்னும் பல. இதை எல்லாம் இப்போது பார்த்து அந்த காலத்தில் இது சாத்தியமா என்பதை கேட்கும் போது காதில் இன்ப தேன் வந்து பாய்கிறது.