Home Health news வைத்திய நிபுணர் இளஞ்செழியனின் கைவண்ணம்!! யாழில் முதன் முறையாக 22 இளைஞன் பெண்ணாக மாற்றப்பட்டார்

வைத்திய நிபுணர் இளஞ்செழியனின் கைவண்ணம்!! யாழில் முதன் முறையாக 22 இளைஞன் பெண்ணாக மாற்றப்பட்டார்

இலங்கையில் முதல் முறையாக யாழ் போதனா வைத்தியசாலையில் ஆண் ஒருவரை பெண்ணாக மாற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 இளைஞன் ஒருவரே தனது சுயவிருப்பின் பேரில் அறுவைச் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியுள்ளார்.

பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன், மற்றும் அவரது குழுவினரால் சுமார் 12 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் ஆண் ஒருவரை பெண்ணாக மாற்றி வெற்றிகரமாக இந்த சத்திரசிகிச்சையை மேற் கொண்டுள்ளனர்.

சத்திர சிகிச்சைக்குள்ளான குறித்த ஆணாக இருந்து பெண்ணாக மாற்றப்பட்ட நபர் தனது கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஆண்மைக்குரிய இலிங்க உறுப்புக்கள் அகற்றப்பட்டு, பெண்ணின் இலிங்க உறுப்பாக அதனை மாற்றி, உணர்ச்சி அங்கங்கள் இணைக்கப்பட்டு குறித்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர் ஒரு பெண்போல ஆணை உடலுறவின் மூலம் திருப்திப்படுத்த முடிந்தாலும் பெண்மைக்கே உரித்தான குழந்தை பேறு, தீட்டு போன்றவற்றை கொண்டிருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளிற்கு