Home Health & Fitness கிட்னி பிரச்சனைகள் வராது தடுப்பதற்கு உண்ண வேண்டிய உணவுகள்

கிட்னி பிரச்சனைகள் வராது தடுப்பதற்கு உண்ண வேண்டிய உணவுகள்

கிட்னி பிரச்சனைகள் வராது தடுப்பதற்கு உண்ண வேண்டிய உணவுகள்

நாம் நமது உடலில் இருக்கக்கூடிய பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றக் கூடிய மிக முக்கிய பணியை செய்யக்கூடிய உறுப்பு கிட்னி அதாவது சிறுநீரகங்கள்.

இந்த சிறுநீரகங்கள் பழுதடைந்து விட்டால் உடலில் இருந்து வெளியேற்றப்படாத கழிவுநீர் உடலின் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளிலும் தேங்கும்.

அதுமட்டுமில்லாமல் உடலிலிருந்து வெளியேற்றப்படாத சிறுநீர் உடலின் உறுப்புகளிலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இதயத்தைச் சுற்றியுள்ள பகுதியிலும் தேங்க தொடங்கும். இதன் காரணமாக மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டு இறுதியில் மரணம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.

பொதுவாக இந்த சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை உள்ளவர்கள் இது போன்றவர்களை எளிதில் தாக்கும் அபாயம் அதிகம்.

பொதுவாக நோய் வந்த பிறகு என்ன செய்வது என்று தவிப்பதை விட வராமல் பாதுகாத்துக் கொள்வதே மிகவும் புத்திசாலித்தனமானது. அந்த வகையில் சிறுநீரகங்களை பலப்படுத்தும் ஏழு உணவுகளைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பூண்டு

தினமும் அன்றாடம் சமைக்கக் கூடிய உணவுகளில் பூண்டு இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே இருதய நோய் வராமல் தடுக்கப்படும். அத்தோடு உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் கரைந்து ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் மூலமாக கிட்னி பாதுகாப்பாக இயங்கும்.

முக்கியமாக சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக குழாயில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை எதிர்த்து போராடி அழிக்கும் ஆற்றல் இந்த பூண்டுக்கு உண்டு. அதனால் பூண்டை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.

கொத்தமல்லி

இது சிறுநீரகங்களில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவக்கூடிய கீரை. கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கொதித்து ஆறிய பிறகு அந்த நீரை வடிகட்டி குடித்துவந்தால் கிட்னியில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேறும். கிட்னியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை செய்து வரலாம்.

திராட்சை

திராட்சையில் விட்டமின் C நல்ல அளவில் இருக்கின்றது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி சிறுநீரகங்களில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இந்த திராட்சைக்கு உண்டு. ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு தேவையான முக்கியமான உணவுகளில் ஒன்று திராட்சை, திராட்சையில் இருக்கக்கூடிய அமிலங்கள் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் தடுக்கின்றது.

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. இஞ்சி உடலில் உள்ள ரத்த குழாய்கள் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. பொதுவாக இஞ்சி அஜீரணம் மற்றும் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. உடலில் செரிமானம் சீராக இருந்தாலே உடலின் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

முட்டைகோஸ்

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு ஒரு சிறப்பான உணவு முட்டைக்கோஸ்.. இதில் இருக்கக்கூடிய வளமையான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்துக்கு பயன்படுவது மட்டுமல்லாமல் பிற உறுப்புகளுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.

இதில் இருக்கக்கூடிய சக்திகள் சிறுநீரகங்களில் நீர்கட்டி வராமல் தடுப்பதற்கு உதவுகின்றது. இதில் நார்ச்சத்துக்களும் இருக்கின்றன. ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு ஒரு சிறந்த உணவாக இது இருக்கின்றது, இதை உணவில் சேர்த்து சாப்பிட்டுவர தவறாதீர்கள்.

மீன்கள்

இதில் உள்ள சக்திகள் சிறுநீரகத்தில் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. அதிலும் சூரை,கானாங்கெளுத்தி,மத்தி போன்ற மீன்களில் அதிகளவான சக்திகள் இருக்கின்றன. மீன்களை வறுக்காமல் குழம்பு செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் மிகவும் நல்லது.

வெங்காயம்

வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர இயற்கையாகவே சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். அதுமட்டுமன்றி சிறுநீரகங்களை சுத்தமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது. அடிக்கடி சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வர சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.

பொதுவாக சாப்பிடும் உணவுகளில் உப்பினை குறைத்து சேர்ப்பது, சிறுநீரகத்தை அடக்கி வைக்காமல் இருப்பது, மது புகை போன்ற போதைப் பொருட்கள் எடுக்காமல் இருப்பது, தினசரி உடற்பயிற்சி செய்வது, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, அதிக சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது இது போன்ற பழக்கங்களை கடைப்பிடித்து வந்தால் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

மிக முக்கியமாக மருத்துவரின் ஆலோசனை இன்றி நீங்களாகவே கடைகளில் மருந்துகளை வாங்கி பயன்படுத்த கூடாது. ஒருவேளை நோயின் தீவிரத்தால் மருத்துவ உதவி தேவைபட்டால் வியாதிக்கேற்ற சரியான அனுபவம் உள்ள மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் தரமான மருந்துகளை வாங்கி சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். இதன் மூலமாக போலி மருந்துகளை வாங்கி சாப்பிடுவது தடுக்கப்படும்.