Home Health news குளிர்காலத்தில்  ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா சரியா தவறா  ?

குளிர்காலத்தில்  ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா சரியா தவறா  ?

குளிர்காலத்தில்  ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டாலே சளி இருமல் இதெல்லாம் வர ஆரம்பிச்சுடும். பார்த்தீங்கன்னா நோய்

அது மட்டும் இல்லைங்க இந்த மாதிரி சமயத்துல தான் பக்கவாதம் மாரடைப்பு இதெல்லாம் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

குளிர் காலத்தில் நம்முடைய சருமமும் வறண்டு போய் பொலிவே இல்லாமலிருக்கும்.

நாம எதை சாப்பிட்டாலும் அவ்வளவு சீக்கிரத்தில் செரிமானம் ஆகாது. செரிமான பிரச்சனை இருக்கும். அதனால மலச்சிக்கல் பிரச்சனையை வரும்.

இதற்கெல்லாம் காரணம் என்று பார்த்தீங்கன்னா குளிர் காலத்தில் நமது உடலின் வெப்பநிலை குறைவது தான் காரணம். அது கூடவே நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியின் அளவும் குறையும்.

இந்த மாதிரி வரும் பிரச்சனையை போக்குவதற்கு நீங்கள் தினமும் ஒரு ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டாலே போதும். அதுவும் கமலா ஆரஞ்சு இருந்தால் ரொம்ப நல்லது. ஆரஞ்சு பழம் பொதுவா புளிப்பா தான் இருக்கும்

ஆனால் குளிர் காலங்களில் மட்டும் இதனுடைய சுவை பார்த்தீங்கன்னா ரொம்ப இனிப்பா இருக்கும். இது ஒரு இயற்கையின் உடைய அற்புதமான செயல் என்று சொல்லலாம்.

இந்த ஆரஞ்சுப் பழத்தை குளிர்காலத்தில் ஏன் சாப்பிடணும், இதை சாப்பிட்டா நமது உடலுக்கு அப்படி என்னதான் ஆரோக்கியம்.

குளிர்காலத்தில்  ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டாலே சளி இருமல் இதெல்லாம் வர ஆரம்பிச்சுடும். பார்த்தீங்கன்னா நோய்

குளிர்காலத்தில் பார்த்தீங்கன்னா தண்ணீர் தாகம் எடுக்கவே எடுக்காது அதனால பலபேர் பாத்தீங்கன்னா தண்ணிய குறைவா தான் குடிப்பாங்க.

குளிர்காலத்தில்  ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா சரியா தவறா  ?

இது ரொம்பத் தவறான விஷயம். இன்னும் சில பேர் பார்த்தீங்கன்னா தண்ணீர் தாகம் அதிகமாக எடுத்தால் கூட அடிக்கடி சிறுநீர் கழிக்க போக வேண்டி இருக்கே

என்று அதற்காக தண்ணீரை குறைவாக குடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. இதனால் உடலில் உள்ள உணவு செரிமானமாகாமல் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

குளிர்காலத்தில் தண்ணீர் எப்பொழுதும் குடிக்கிறது போல் அதிகமாக குடிப்பது மட்டுமில்லாமல் இந்த ஆரஞ்சு பழத்தையும் கூடவே எடுத்துக்கொண்டால் இது இந்த செரிமான பிரச்சனையை போக்கி உங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.

உடம்பில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி இந்த ஆரஞ்சு பழத்திற்கு இருக்கு. குளிர் காலத்தில் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் கொஞ்சம் வலுவிழந்து போய் இருக்கும்.

ஆனால் இந்த ஆரஞ்சு பழத்தில் பார்த்தீங்கன்னா விட்டமின் சி ( Vitamin C ) இருக்கு. இது பாத்தீங்கன்னா நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் அதனால உடலில் கிருமியை எதிர்த்துப் போராட சக்தியை இது அதிகரிக்கும்.

குளிர் காலத்தில் பொதுவாக பாத்தீங்கன்னா சருமம் வறண்டு போய் இருக்கும்.

இந்த மாதிரி சமயத்தில ஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து சருமத்தில் தடவினாலே போதும் தோல் ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்துடனும் இருக்கும்.

குளிர்காலத்தில்  ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா சரியா தவறா  ?

நிறையப்பேர் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சொல்லுவாங்க, ஆனா அது அப்படி எல்லாம் இல்லைங்க. குளிர் காலங்களில் சளி இருமல் வராமல் இருக்கவும் அதைத் தடுப்பதற்கும் ஒரு ஆரஞ்சுப் பழத்தை முழுமையாக சாப்பிடலாம்.

இதில் உள்ள விட்டமின் சி ( Vitamin C )பார்த்தீங்கன்னா நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி சளியை குறைக்கும்.

குளிர்காலங்களில் பொதுவாவே நமது உடலில் இருக்கக்கூடிய இரத்த ஓட்ட நரம்புகள் எல்லாம் சுருங்க ஆரம்பித்துவிடும்.

இதனால் இதயத்திற்கு போகும் இரத்தத்திற்கு பிரச்சனை ஏற்படும், அதனால் தான் குளிர்காலங்களில் பாத்தீங்கன்னா பக்கவாதம் மாரடைப்பு அதிகமா வருகிறது.

ஆனா இந்த ஆரஞ்சு பழத்திற்கு பாத்தீங்கன்னா இரத்த ஓட்டம் உள்ள நரம்புகளை எல்லாம் சுருக்கி விரிக்கும் திறன் காணப்படுகின்றது.

அப்படி குளிர்காலங்களில் ஆரஞ்சு பழம் சாப்பிடும் பொழுது மாரடைப்பு பக்கவாதம் இதுக்கெல்லாம் எதிராக போராடுகின்றது.

ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் அது எமக்கு பசி எடுக்கும் தன்மையைக் குறைத்துவிடும். இதனால் உடலுக்கு தேவையான சக்தியையும் கொடுத்து உடல் எடையையும் குறைக்கும்.

உங்களுக்கு சிறுநீரக கல் இருந்துச்சுன்னா ஆரஞ்சு பழச்சாற்றை சாப்பிட்டாலே போதும். ஆரஞ்சு பழம் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பை குறைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் இருக்கின்ற விட்டமின் சி சத்து பார்த்தீங்கன்னா கண் பார்வை குறைபாட்டை போக்கும். மாலைக்கண் நோய் நோய் கண்ணில் ஏற்படும் அழுத்தம் இது எல்லாத்தையும் குறைக்கும்.

முக்கியமான விடயம் ஆரஞ்சுப்பழத்துடன் பாலை சேர்த்து சாப்பிடக்கூடாது.

இது உடலுக்கு தேவையற்ற பிரச்சினையை கொடுக்கும் ஏனென்றால் இவை இரண்டும் சேர்த்து செறிமானம் ஆவது மிகவும் கடினமான விடயம்.

மற்றும் ஆரஞ்சு பழம் மட்டுமல்லாமல் நீங்கள் எந்த பழத்தை வாங்கி குளிரூட்டியில் வைத்து சாப்பிட்டாலும் எந்தப் பயனும் உங்களுக்கு கிடைக்காது.

இது பழங்களை குளிர்ச்சியாகவும் வாடாமலும் மட்டுமே வைத்து இருக்குமே தவிர அதில் உள்ள உயிர் சத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். அதுக்கு அப்புறமா அதை சாப்பிடுவதால் எமக்கு எந்த பயனும் இல்லை.

வெளியில் வைத்திருந்தாலும் அது லேசாக வாடி இருந்தால்கூட அந்த பழத்தில் உள்ள உயிர்ச்சத்து அப்படியே தான் இருக்கும். முடிந்த வரைக்கும் பழங்களை குளிரூட்டியில் வைக்காது சாப்பிட பழகுங்கள்.