Home Cinema ஆட்டத்தை அக்டோபர் மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்போகும் அஜித் !! படப்பிடிப்பு பற்றி வெளியானது தகவல்கள்

ஆட்டத்தை அக்டோபர் மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்போகும் அஜித் !! படப்பிடிப்பு பற்றி வெளியானது தகவல்கள்

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் முதன் முதலாக இணைகிறார் தல அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதியில் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 35 முதல் 40 நாட்களுக்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும், இந்த படத்தை விரைந்து முடித்து வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோத் இயக்கத்தில் மூன்றாவது படத்தில் நடித்துவரும் அஜித் குமார், அடுத்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் AK62-வில் இணைகிறார். படத்தை பற்றிய மற்ற எந்த தகவலும் இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

35 முதல் 40 நாட்களுக்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும், சிங்கிள் ஸ்ட்ரெச் ஷாட்டுகள் அதிகமாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ட்விட்டரில் சினிமா செய்தியாளர் ரிச்சர்ட் மகேஷ் தெரிவித்திருக்கிறார். விரைந்து படப்பிடிப்பைப் பூர்த்தி செய்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் படத்தை வெளியிடுவதற்கான ஆயத்தங்களும் செய்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன.

ஹிந்தி பட தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனீ கபூரின் தயாரிப்பு நிறுவனத்துடன், மூன்று படங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியாகியது. அதில், நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் வெளிவந்துள்ள நிலையில், மூன்றாவது படம், AK61 தயாரிப்பில் உள்ளது. மற்ற இரண்டு படங்களை இயக்கிய வினோத் தான் இதையும் இயக்குகிறார். இந்த படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது.

இன்னொரு புறம், விக்னேஷ் இயக்கத்தில் அடுத்த படம் அஜித் ஒப்பந்தமாகியிருக்க, இதை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது