Home LOCAL NEWS 45 அடி ஆழமான குழியில் விழுந்த பெண்

45 அடி ஆழமான குழியில் விழுந்த பெண்

அம்பேகம, மிரிஸ்வத்த மலைப் பகுதியில்

அம்பேகம பிரதேசத்தில் சுமார் 45 அடி ஆழமான குழியில் பெண் ஒருவர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (19) காலை பத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி அம்பேகம, மிரிஸ்வத்த மலைப் பகுதியில் சுமார் 45 அடி ஆழமான குழியில் பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

பெண் ஒருவர் கத்தும் சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அம்பேகம, மிரிஸ்வத்த மலைப் பகுதியில்

குழிக்குள் சிக்கிய 50 வயது பெண்ணை அப்பகுதி மக்கள் உதவியுடன் பொலிஸார் மீட்டனர்.

மீட்கப்படும் போது பெண் ஆபத்தான நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அவர் சிகிச்சைக்காக காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்றைய தினம் குறித்த குழிக்குள் விழுந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், இதுவரையில் அவரால் வாக்குமூலம் வழங்கமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.