இந்திய அஹமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி என அறிவிக்கபட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அஹமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு
11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அஹமாதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர் வெடி குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சுமர் 70 நிமிட இடைவெளியில் 21 வெடி குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன.
இந்த தொடர் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 240 பேர் காயம் அடைந்தனர். இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் 77 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 49 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது.
49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கபட்டுள்ளது.
11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
26 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.