Home CINEMA NEWS பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் திடீர் மரணம்!

பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் திடீர் மரணம்!

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு தற்போது வயது 65.

இதுவரை 400 க்கும் மேற்பட்டப் படங்களில் 1400 பாடல்களை எழுதியுள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

செம்பருத்தி படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடியவர் பிறைசூடன். அதேபோல் பொங்கி வரும் காவேரி படத்தில் எல்லோரையும் உருக்கிய பாடலான மன்னவன் பாடும் பாடலை இவர்தான் எழுதியுள்ளார்.

நேற்ற மாலை திடீர் மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.