Home Life & Love வாழ்க்கை கொடுத்த வள்ளல்

வாழ்க்கை கொடுத்த வள்ளல்

எலும்பு உருக்கும் நோயால் பாதிக்கப்பட்ட பாத்திமா அஸ்லாவிற்கு வீல் சேரையே மஹராக கொடுத்து தனது வாழ்க்கை துணையாக ஆக்கிக்கொண்டுள்ளார் லட்சத்தீவை சேர்ந்த ஃபிரோஸ்

எனது வாழ்க்கையின் முக்கியமான ஒரு பாகமாக இருக்கும்
“வீல் சேரை ” மஹரமாக தந்து என்னை நிக்காஹ் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை , ஆனால் எனக்கு இப்படி நடக்குமா என ஏங்கியதுண்டு என்கிறார் பாத்திமா அஸ்லா

தனக்கு ஏற்பட்ட அபூர்வமான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதையெல்லாம் கண்டு மனம் தளராமல் ஹோமியோ டாக்டராகவும் ஒரு எழுத்தாளராகவும் உயர்ந்து நிற்கிறார் அஸ்லா , அவருக்கு மிகவும் மன தைரியத்தையும் அருகிலிருப்பவர்கள் ஏளனம் செய்பவர்கள் என எதையும் கண்டு மனம் தளராத தெளிவான தைரியத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள் அஸ்லாவின் பெற்றோர்களான அப்துல்நாசரும் ஆமினாவும்.

ஏசியன் ஃப்ளு ஆர்ட்ஸின் டைரக்டரும் ஆசிரியருமாக இருக்கிறார் ஃபிரோஸ்

வீல்சேரை மஹராக கொடுத்து நிக்காஹ் செய்தவர் உலகிலேயே ஃபிரோஸாக ஒருவேளை இருக்கலாம் ஆனால் அதனை விட ஒரு நல்ல மாற்றத்திற்கு நாங்கள் முதல் ஆரம்பமாக இருப்போம் என்பதிலேயே எங்கள் இருவருக்கும் அதிக சந்தோசமுள்ளது என்கிறார்கள் இந்த இளம் தம்பதிகள்.