களுவாஞ்சிகுடி கடற் பகுதியில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட இருவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு தொகை மீன் பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ,இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் மீன்பிடிக்கு பயன்படுத்திய ஒரு வலை, ஒரு ,இயந்திரப்படகு, ஒரு என்ஜின், இரண்டு வெற்றிகள், போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றிய பொருட்களை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்து நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.