Home LOCAL NEWS வேலைநிறுத்த போராட்டத்தில் களமிறங்க தயாராகும் அகில இலங்கை தாதியர் சங்கம்

வேலைநிறுத்த போராட்டத்தில் களமிறங்க தயாராகும் அகில இலங்கை தாதியர் சங்கம்

நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.

குறிப்பாக தாதியர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேற்படி வேலைநிறுத்தமானது நாளை (31) காலை காலை 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பி. மெதிவத்த தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அனைத்து இலங்கை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த குருகே தெரிவிக்கையில்,

தாதியர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நாளைய தினத்துக்கு முன்னதாக தீர்க்கப்படாவிட்டால், எமது தொழிற்சங்கமும் முன் அறிவிப்பின்றி வேலைநிறுத்தத்தைத் ஆரம்பிக்கும் என தெரிவித்தார்.

குறிப்பாக கொரோனா பரவலை தடுப்பதற்காக தாதியர்கள் தமது கடமைகளை செய்வதற்கான ஆபத்து கொடுப்பனவு வழங்குவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை உள்ளடக்கி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

அனைவருக்கும்;-

எதிர்வரும் 03.06.2021 அன்று காலை 8.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை பணிப்புறக்கணிப்பும் நண்பகல் 12.00 மணிமுதல் 12.30 மணிவரை அமைதியான வெளிநடப்பும் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது வெற்றிபெற சிறப்பாக ஒழுங்கு செய்யவும்.

சமன் ரத்னபிரிய
தலைவர்
அ.தா.உ.சங்கம்