கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட, புரட்டொப், மேமலை தோட்டத்தில் இளைஞர் ஒருவர்மீது இனந்தெரியாதோர் இன்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மேமலை தோட்டத்தில் வாழும் மக்கள், கசிப்பு உட்பட சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் போதைப்பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும், போதையற்ற மலையகம் உருவாக வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இப்போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய தேவதாஸ் திவ்யானந்தன்மீதே வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து அத்தோட்டத்தில் பெரும் பதற்றம் நிலவியது. இதற்கு கண்டனம் தெரிவித்து தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கானவர் புஸல்லாவை, வகுப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

சந்தேகத்தின் பேரில் ஐவரை புஸல்லாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்