மொனராகலை பிபிலை கரம்மிட்டிய மலைக்குச் சென்ற செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் என்று, பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.

பிபிலை மெதகம பிரதேசத்தைச் சேர்ந்ந 19 வயதான எ.எம்.அகில என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது நண்பர்களுடன் மலைக்குச் சென்றபோதே, காலிடறி விழுந்துள்ளார் என்று தெரியவருகிறது.

பிரேதப் பரிசோதனைக்காக பிபிலை பிரதான வைத்தியசாலையிலன் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.