முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிய நபர்களில் இதுவரை 350 ற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதை தொடர்ந்து 17.05.21 ஆம் திகதி இரவு 11.00 மணிதொடக்கம் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலீஸ்பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை ஆடைத்தொழில்சாலையினை உடனடியாக தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆடைத்தொழில்சாலையில் அதிகளவானவர்கள் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதிகளை சேர்ந்தவர்கள் பணியாற்றிவருகின்றார்கள்.

இவர்களது குடும்பங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்த பட்டுள்ளார்கள் இதுகுறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மாகாணசுகாதாரபணிமனையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதேவேளை மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார்,மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு நகரம்,புதுக்குடியிருப்புநகரம்,முள்ளியவளை நகரப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.