Home jaffna news இறந்தபின்னரும் தமிழர்கள் நின்மதியாக இளைப்பாறமுடியாது

இறந்தபின்னரும் தமிழர்கள் நின்மதியாக இளைப்பாறமுடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக உடைக்கப்ட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்,மற்றும் கட்சியின் முக்கியஸ்தரும் சட்டவாளருமான க.சுகாஸ் உள்ளிட்டவர்கள் அதிகாலை வேளையிலேயே முள்ளிவாய்க்கால் பகுதிக்கு பறந்து சென்றுள்ளார்கள்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டவாளர் க.சுகாஸ் அவர்கள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அமைதியான முறையில் நினைவிற்கொள்ள ஈழத்தமிழினம் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் அரச அதிகாரத்தின் பக்கத்துணையுடன் இனப்படுகொலையின் சாட்சியாக அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பவர்களின் அடையாளமாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியின் பாகங்கள் அகற்றப்பட்டு தமிழ்மக்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

நேற்றையநாள் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டு கொரோனாவை தடுக்கின்றோம் என்ற போர்வையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் பொலீசாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் படையினரை தவிர வேறு எவரும் இந்த அநாகரிகமான செயலினை மனித குலத்திற்கு ஒவ்வாத செயலை செய்திருக்கமுடியாது.

இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியினை உடைத்து அகற்றியதுடன் மட்டுமல்லாமல் மதத்ததலைவர்களால் கொண்டுவரப்பட்ட கல்லினையும் துக்கியுள்ளார்கள்.

இது சட்டத்தின் பிரகாரம் களவு,இதனை இலங்கை இராணுவத்தினர் செய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இனப்படுகொலையாளிகள் என்ற பெயரை சூடிநின்ற இலங்கை இராணுவம் திருடர்கள் என்கின்ற பெயரை புதிதாக வாங்கியுள்ளார்கள்.

இந்த சம்பத்திற்கு எதிராக இலங்கை இராணுவத்தளபதி,ஜனாதிபதிகோட்டபாஜறாஜபக்ச,பொலீஸ்மா அதிபர் ஆகியோர் பதிலளிக்கவேண்டும்.

இங்கு நடைபெற்றது ஈழத்தமிழர்களுக்கு எதிராகதொடச்சியாக நடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இன்னொரு அங்கம்,பல்கலையில் தூபியினை உடைத்தீர்கள் தூபி புதிதாக மலர்ந்தது வரலாறு தெரியாதவர்களுக்கும் வரலாறு பாச்சப்பட்டது.

ஒருபோதும் ஈழத்தமிழர்களின் உணர்வெளிச்சியினையோ விடுதலைஉணர்வினையோ கட்டுப்படுத்தமுடியாது மாறாக விடுதலைதீயினை வரலாறு தெரியாத சிறுவர்களுக்கும் குளந்தைகளுக்கும் எதிர்கால சந்ததிக்கும் கடத்துவதற்கும் இப்படியான விடையங்கள் வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதுடன் இவற்றுக்கு எல்லாம் முடிவு காணவேண்டுமாக இருந்தால் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்.

சிலை உடைக்கப்பட்டிருப்பது ஈழத்தமிழர்களுக்கும் உயிரோடு மட்டுமல்ல இறந்தபின்னும் நின்மதியாக இளைப்பாறமுடியாது என்பதைத்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.