சாய்ந்தமருதில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

கடலில் தங்கியிருந்து மீன் பிடிக்கும் தொழிலை செய்துவந்த குறித்த இரு மீனவர்களும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்ததாக இவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

சாய்ந்தமருதை சேர்ந்த அன்ஸார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் இக்பால் (வயது-42), எம்.எஸ். அர்சாத் (வயது-35) ஆகியோரே மின்னலுக்கு இலக்காகி மரணித்துள்ளனர்.

இவர்களின் சடலங்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னல் தாக்குதலில் காயமடைந்த இப்ராஹிம் மன்சூர் (வயது- 43) (மரணித்த இப்ராஹிம் இக்பாலின் சகோதரர்) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சாய்ந்தமருதில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.