தலைமன்னாரில் தொடருந்துடன் பாடசாலை பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களுக்கு குருதி ஏற்ற வேண்டிய நிலையில் மன்னார் வைத்தியசாலை க்கு குருதிக்கொடையாளர்கள் உதவி கோரப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலை யில் மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.இதேவேளை, படுகாயமடைந்த 9 வயது மாணவர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் இரண்டு மாணவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக மன்னார் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.