Home LOCAL NEWS காதல் திருமணம்!! 41 நாட்களில் இளம் தம்பதிகள் தூக்கிட்டு மரணம்!

காதல் திருமணம்!! 41 நாட்களில் இளம் தம்பதிகள் தூக்கிட்டு மரணம்!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவங்கேணியில் காரைதீவை சேர்ந்த இளைஞனும், களுவங்கேணியை சேர்ந்த யுவதியும் காதலித்து 20-06-2020. அன்று திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி ஏழு மாதங்களுக்குள் கணவரோடு முறன்பட்ட மனைவி 18-01-2021 அன்று தனது வீட்டில் தூக்கிட்டு மரணமானார்.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான கணவர், மனைவியின் 41 ஆம் நாள் மதச் சடங்கை முடித்துவிட்டு தானும் தூக்கிட்டு மரணித்த சோக சம்பவம் நேற்று முந்தினம் 02-03-2021 செவ்வாய் மாலை களுவங்கேணியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞனின் சடலம் 03-03-2021 அன்று பிரேத பரிசோதனையின் பின்னர், காரைதீவு இந்து மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடிகள் அடுத்தடுத்த தூக்கில் தொங்கி பலியான சம்பவம் அப்பிரதேசத்தில் சோகத்தை உண்டாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திக்கு

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு !!

ஏனைய செய்திகளிற்காக முகப்பிற்கு செல்ல