அஜீத் குமாரின் வலிமை திரைப்படம் மூன்றாவது வாரத்தில் திரையிடப்பட்டு, தமிழகம் மற்றும் சர்வதேச நாடுகளில் அணைத்து திரையரங்குகளில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. எதற்கும் துணிந்தவர் படம் வந்தபோதிலும் , வலிமை தமிழ்நாட்டில் பல திரைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது மற்றும் மூன்றாவது வாரத்தை நேர்மறையான குறிப்பில் தொடங்கியதாகத் தெரிகிறது. சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய புதிய வெளியீடுகள் இருந்தபோதிலும் திரையரங்கு உரிமையாளர்கள் வலிமையை திரையிட விரும்புகிறார்கள்
பொதுவாக சினிமா நடிகர்கள் எப்போதும் தங்கள் தோற்றத்தில் அதிக கவனம் காட்டுவார்கள். அதனால் பெரும்பாலானோர் நரைத்த முடியுடன் பொது வெளியில் தோன்றுவதில்லை. ஆனால் சில நடிகர்கள் இந்த வழக்கத்தையும் மாற்றியுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி. சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலை ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலப்படுத்தியவர் இவரே. இவரது பல படங்களில் கறுப்பு வெள்ளை முடியுடன் இயல்பான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்தவர்.
இந்த லுக் தமிழகத்தில் அதிக கவனம் பெற அஜித் தான் முக்கிய காரணம் என்று சொன்னால் மிகையாகாது. அஜித் தனது 50வது படமான மங்காத்தாவில் நரை முடி கலந்த வெள்ளை முடியுடன் நடித்தார்.
அந்த தோற்றம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், அவர் தனது அடுத்த அனைத்து படங்களிலும் அதே தோற்றத்தில் நடிக்க தொடங்கினார். இதனை பார்த்து இன்ஸ்பியர் ஆனா பலர் டை அடிப்பதை நிறுத்திவிட்டு சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், விஜய் டிவி தொகுப்பாளர் டிடியுடன் கேமராமேன் ஒருவர் பேசும் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். அதில் அஜித் தான் என்னுடைய இந்த நரைத்த முடி தோற்றத்திற்கு தான் காரணம் என கூறியுள்ளார்.
அஜித்துடன் வீரம், வேதாளம், விஸ்வாசம், விவேகம் ஆகிய நான்கு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். எனக்கு அவர் தான் இன்ஸ்பிரேஷன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது யார் முடி நரைத்து இருந்தாலும், என்னப்பா அஜித் கெட்டப்ஹா என்று கேட்கும் அளவிற்கு மாறி உள்ளது.
#Ajith pic.twitter.com/BG03L9w50q
— RJ RaJa (@rajaduraikannan) March 15, 2022